ஹதீஸ்கள்
#1535
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்னுல்வாதியில் உள்ள துல்ஹுலை ஃபாவில் (இரவின் இறுதியில்) ஓய்வெடுக் கும் இடத்தில் நபி (ஸல்) அவர்கள் இருந்தபோது கனவு கண்டார்கள்; (அக்கனவில்) “நீங்கள் வளமிக்க அழகிய பள்ளத்தாக்கில் இருக்கின்றீர்கள்” என்று (வானவரால்) கூறப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓய்வெடுத்த இடத்தைத் தேர்வு செய்ததைப் போன்று இப்னு உமர் (ரலி) அவர்களும் அங்கேயே தமது ஒட்டகத்தைப் படுக்கவைப்பார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களின் புதல்வர் சாலிமும் அவ்வாறே செய்வார்கள். முஅர்ரஸ் எனுமிடம் பத்னுல்வாதியில் உள்ள பள்ளிவாசலின் கீழ்ப் புறத்தில் இருந்த சாலைக்கும் மக்கள் தங்குமிடத்திற் கும் நடுவில் உள்ளது என்று மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن ابي بكر، حدثنا فضيل بن سليمان، حدثنا موسى بن عقبة، قال حدثني سالم بن عبد الله، عن ابيه رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم انه ريي وهو في معرس بذي الحليفة ببطن الوادي قيل له انك ببطحاء مباركة. وقد اناخ بنا سالم، يتوخى بالمناخ الذي كان عبد الله ينيخ، يتحرى معرس رسول الله صلى الله عليه وسلم وهو اسفل من المسجد الذي ببطن الوادي، بينهم وبين الطريق وسط من ذلك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1535
- Book Index
- 23
Grades
- -
