ஹதீஸ்கள்
#1531
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கூஃபா, பஸ்ரா எனும்) இந்த இரு (இராக்) நகரங்கள் வெற்றி கொள்ளப்பட்ட போது, அங்குள்ளோர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்கள் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்ன்’ எனும் இடத்தை (இஹ்ராம் கட்டும் எல்லையாக) நிர்ணயித்துள்ளார்கள். அது, நாங்கள் (மக்கா விற்கு) செல்லும் பாதையிலிருந்து விலகியுள்ளது. நாங்கள் ‘கர்ன்’ வழியாகச் செல்வதானால் அது மிகவும் சிரமமாகும்” என்றனர். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அதற்கு எதிரில் உள்ள ஓரிடத்தை உங்களது பாதையிலேயே கூறுங்கள்” என்றார்கள். பின்பு ‘தாத்து இர்க்’ என அவர்களுக்கு எல்லை நிர்ணயித்தார்கள். அத்தியாயம் :
حدثني علي بن مسلم، حدثنا عبد الله بن نمير، حدثنا عبيد الله، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال لما فتح هذان المصران اتوا عمر فقالوا يا امير المومنين، ان رسول الله صلى الله عليه وسلم حد لاهل نجد قرنا، وهو جور عن طريقنا، وانا ان اردنا قرنا شق علينا. قال فانظروا حذوها من طريقكم. فحد لهم ذات عرق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1531
- Book Index
- 19
Grades
- -
