ஹதீஸ்கள்
#1530
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், மதீனாவாசி களுக்கு ‘துல்ஹுலைஃபா’வையும் ஷாம் (சிரியா)வாசிகளுக்கு ‘அல்ஜுஹ்ஃபா’வை யும் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்னுல் மனா ஸிலை’யும் யமன்வாசிகளுக்கு ‘யலம் லமை’யும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இவ்வழிகளில் வருபவர்களுக்கும் உரியனவாகும்; இந்த (வரையறுக்கப்பட்ட) எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே (எங்கேனும்) இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம்; மக்கா வாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا معلى بن اسد، حدثنا وهيب، عن عبد الله بن طاوس، عن ابيه، عن ابن عباس، رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم وقت لاهل المدينة ذا الحليفة، ولاهل الشام الجحفة، ولاهل نجد قرن المنازل، ولاهل اليمن يلملم، هن لاهلهن ولكل ات اتى عليهن من غيرهم ممن اراد الحج والعمرة فمن كان دون ذلك، فمن حيث انشا حتى اهل مكة من مكة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1530
- Book Index
- 18
Grades
- -
