ஹதீஸ்கள்
#1522
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
ஸைத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களது வீட்டிற்கு வந்தேன். ஒரு கூடாரம்தான் அவர்களின் வீடாக இருந்தது. நான் அவர்களிடம், “உம்ராவுக் காக எந்த இடத்திலிருந்து நான் இஹ்ராம் கட்டலாம்?” எனக் கேட்டேன். அதற்கு, “நஜ்த்வாசிகள் ‘கர்ன்’ எனும் இடத்திலிருந்தும் மதீனாவாசிகள் ‘துல் ஹுலைஃபா’விலிருந்தும் ஷாம் (சிரியா) வாசிகள் ‘அல்ஜுஹ்ஃபா’விலிருந்தும் இஹ்ராம் கட்ட வேண்டுமென அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எல்லைகள் நிர்ணயித்தார்கள்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا مالك بن اسماعيل، حدثنا زهير، قال حدثني زيد بن جبير، انه اتى عبد الله بن عمر رضى الله عنهما في منزله وله فسطاط وسرادق، فسالته من اين يجوز ان اعتمر قال فرضها رسول الله صلى الله عليه وسلم لاهل نجد قرنا، ولاهل المدينة ذا الحليفة، ولاهل الشام الجحفة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1522
- Book Index
- 10
Grades
- -
