ஹதீஸ்கள்
#1518
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனைவரும் உம்ரா செய்துவிட்டீர்கள்; நான் மட்டும் உம்ரா செய்யவில்லை” எனக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்துர் ரஹ்மானே! உம்முடைய சகோதரியை அழைத்துச் சென்று, தன்யீமிலிருந்து அவரை உம்ரா செய்யவைத்து வாரும்” என்றார்கள். அப்துர் ரஹ்மான் என்னை ஒட்டகத்தின் சேண(த்துடன் இணைந்த) இருக்கையின் பின்பகுதியில் அமர்த்தினார்; நான் உம்ரா செய்தேன். அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، حدثنا ابو عاصم، حدثنا ايمن بن نابل، حدثنا القاسم بن محمد، عن عايشة رضى الله عنها انها قالت يا رسول الله، اعتمرتم ولم اعتمر. فقال " يا عبد الرحمن اذهب باختك فاعمرها من التنعيم ". فاحقبها على ناقة فاعتمرت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1518
- Book Index
- 6
Grades
- -
