ஹதீஸ்கள்
#1392
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அம்ர் பின் மைமூன் அல்அவ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களை (மரணத் தறுவாயில்) பார்த்தேன். அவர்கள் (தம் புதல்வரிடம்), “அப்துல்லாஹ்வே! இறைநம்பிக்கை யாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, ‘உமர் பின் அல்கத்தாப் உங்களுக்கு சலாம் கூறுகிறார்’ என்று சொல்லிவிட்டு என் தோழர்கள் (நபி (ஸல்), அபூபக்ர் (ரலி) ஆகிய) இருவருடன் நானும் அடக்கம் செய்யப் பட வேண்டும் என்பதற்கு அவர்களி டம் அனுமதி கேள்” எனக் கூறி னார்கள். (அவ்வாறே கேட்கப்பட்டதும்,) ஆயிஷா (ரலி) அவர்கள், “நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன். இருந்தாலும், இன்று நான் அவருக்காக அதை விட்டுக்கொடுக்கின்றேன்” என்றார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் திரும்பி வந்தபோது உமர் (ரலி) அவர்கள் “என்ன பதில் கிடைத்தது?” எனக் கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அனுமதியளித்துவிட்டார் கள்” எனக் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், “நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு மிக முக்கியமானதாக இல்லை. என் உயிர் கைப்பற்றப் பட்டவுடன் என்னைச் சுமந்து சென்று, ஆயிஷா (ரலி) அவர்களிடம் (மீண்டும்) எனது சலாமைக் கூறி, “உமர் அனுமதி கேட்கிறார்” எனக் கூறுங்கள். அவர்கள் எனக்கு அனுமதியளித்தால் என்னை அங்கு அடக்கம் செய்யுங்கள்; இல்லையெனில் என்னை முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கி விடுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது யார்மீது முழு திருப்தி கொண்டிருந்தார்களோ அந்த இக்குழுவினரைவிட வேறு யாரும் இந்த (ஆட்சியதிகார) விஷயத்திற்குத் தகுதியுடையவர்களாக எனக்குத் தெரியவில்லை. எனவே, எனக்குப் பிறகு இவர்களில் யாரை ஆட்சித் தலைவராக (கலீஃபா) தேர்ந்தெடுக்கிறீர்களோ அவர்தான் கலீஃபா! அவர் சொல்வதைக் கேட்டு அவருக்குக் கட்டுப்படுங்கள்” எனக் கூறிவிட்டு, உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபீதாலிப் (ரலி), தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) ஆகியோரின் பெயர் களைக் குறிப்பிட்டார்கள. அப்போது அன்சாரிகளில் ஓர் இளைஞர் அங்கு வந்து, “இறைநம் பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள்! இஸ்லாத்தில் உங்களுக்கு உள்ள சிறப்பு என்ன என்பதைத் தாங்கள் அறிவீர்கள். பிறகு நீங்கள் தலைவராகி நீதி செலுத்தினீர்கள். அடுத்து இதற்கெல்லாம் மேலாக வீரமரணமும் (ஷஹாதத்) கிடைத்திருக் கிறது” என்றார். உமர் (ரலி) அவர்கள், “என் சகோதர ரின் மகனே! எனது விருப்பமெல்லாம், இந்த ஆட்சிப்பொறுப்பு எனக்கு நன்மை யாகவும் இல்லாமல், தீமையாகவும் இல்லாமல் சரிநிகராக இருந்தாலே போதும் என்பதுதான்” எனக் கூறிவிட்டு, “எனக் குப் பின்னால் தலைவராக வருபவருக்கு நான் கூறிக்கொள்வது யாதெனில் அவர், துவக்கத்தில் ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்கள் விஷயத்தில் நல்லபடி நடந்துகொள்ள வேண்டும்; அவர்களின் உரிமைகளை அறிந்து, அவர்களின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் பேணிக் காக்க வேண்டும். அவ்வாறே, அன்சாரிகளிடமும் அவர் நல்ல விதமாக நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் இந்நகரத்தையும் (மதீனா), இறைநம்பிக்கையையும் சொந்த இடமாக ஆக்கிக்கொண்டவர்கள். அவர்களில் நல்லவர்களின் நற்செயலை ஏற்(று மதிக்)க வேண்டும்; தவறிழைக்கக்கூடியவர்களை மன்னித்துவிட வேண்டும். மேலும், அல்லாஹ்வின் பொறுப்பிலும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் பொறுப்பிலும் உள்ள (முஸ்லிம்களல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அவர்களைப் பாதுகாக்கப் போர் புரிய வேண்டும். அவர்களது சக்திக்குமேல் அவர்களைச் சிரமப்படுத்தக் கூடாது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا جرير بن عبد الحميد، حدثنا حصين بن عبد الرحمن، عن عمرو بن ميمون الاودي، قال رايت عمر بن الخطاب رضى الله عنه قال يا عبد الله بن عمر، اذهب الى ام المومنين عايشة رضى الله عنها فقل يقرا عمر بن الخطاب عليك السلام، ثم سلها ان ادفن مع صاحبى. قالت كنت اريده لنفسي، فلاوثرنه اليوم على نفسي. فلما اقبل قال له ما لديك قال اذنت لك يا امير المومنين. قال ما كان شىء اهم الى من ذلك المضجع، فاذا قبضت فاحملوني ثم سلموا ثم قل يستاذن عمر بن الخطاب. فان اذنت لي فادفنوني، والا فردوني الى مقابر المسلمين، اني لا اعلم احدا احق بهذا الامر من هولاء النفر الذين توفي رسول الله صلى الله عليه وسلم وهو عنهم راض، فمن استخلفوا بعدي فهو الخليفة، فاسمعوا له واطيعوا. فسمى عثمان وعليا وطلحة والزبير وعبد الرحمن بن عوف وسعد بن ابي وقاص، وولج عليه شاب من الانصار فقال ابشر يا امير المومنين ببشرى الله، كان لك من القدم في الاسلام ما قد علمت، ثم استخلفت فعدلت، ثم الشهادة بعد هذا كله. فقال ليتني يا ابن اخي وذلك كفافا لا على ولا لي اوصي الخليفة من بعدي بالمهاجرين الاولين خيرا، ان يعرف لهم حقهم، وان يحفظ لهم حرمتهم، واوصيه بالانصار خيرا الذين تبوءوا الدار والايمان ان يقبل من محسنهم، ويعفى عن مسييهم، واوصيه بذمة الله وذمة رسوله صلى الله عليه وسلم ان يوفى لهم بعهدهم، وان يقاتل من ورايهم، وان لا يكلفوا فوق طاقتهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1392
- Book Index
- 146
Grades
- -
