ஹதீஸ்கள்
#1390
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இறுதி நாட்களில்) நோயுற்றி ருந்தபோது, “யூதர்களையும் கிறித்தவர் களையும் அல்லாஹ் தனது கருணை யிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தங்களுடைய நபிமார்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிவிட்டார்கள்” எனக் கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லாதிருந் தால் நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலம் திறந்தவெளியில் அமைக்கப்பட்டி ருக்கும். எனினும், நபி (ஸல்) அவர்கள் தமது அடக்கத் தலம் வழிபாட்டுத் தலமாக ஆக்கப்பட்டுவிடும் என ‘அஞ்சினார்கள்’ அல்லது ‘அஞ்சப்பட்டது’. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிலால் அல்வஸ்ஸான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்தபோது) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் என்னைக் குறிப்புப் பெயரிட்டு (இன்னவரின் தந்தையே! என) அழைத்தார்கள். ஆனால் (அப்போது) எனக்குக் குழந்தை பிறந்திருக்கவில்லை. நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலம் (கப்று) சற்று உயரமாக இருந்ததைத் தாம் பார்த்ததாக சுஃப்யான் பின் தீனார் அத்தம்மார் (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள். உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: வலீத் பின் அப்தில் மலிக்கின் (ஆட்சிக்) காலத்தின்போது (நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட அறையின்) ஒரு சுவர் இடிந்து விழுந் தது. அதை எழுப்பும் பணியில் மக்கள் ஈடுபட்டபோது ஒரு பாதம் வெளியில் தெரிந்தது. உடனே மக்கள் பதறிப்போய் அது நபி (ஸல்) அவர்களின் பாதமாக இருக்குமோ என நினைத்தனர். இது பற்றித் தெரிந்தவர் யாருமில்லாதிருந்த சமயத்தில் நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது நபி (ஸல்) அவர் களின் பாதமே இல்லை; மாறாக, இது உமர் (ரலி) அவர்களின் பாதம்தான்” என்றேன். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابو عوانة، عن هلال، عن عروة، عن عايشة رضى الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم في مرضه الذي لم يقم منه " لعن الله اليهود والنصارى، اتخذوا قبور انبيايهم مساجد ". لولا ذلك ابرز قبره، غير انه خشي او خشي ان يتخذ مسجدا. وعن هلال قال كناني عروة بن الزبير ولم يولد لي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1390
- Book Index
- 142
Grades
- -
