ஹதீஸ்கள்
#1372
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை பற்றிக் கூறிவிட்டு, “அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையை விட்டுப் பாதுகாப்பானாக” என்றும் கூறினாள். பிறகு அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆம். அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை உண்டு” எனக் கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் தாம் தொழுகின்ற எந்தத் தொழுகையிலும் அடக்கத் தலத்தின் (கப்று) வேதனையிலிருந்து (அல்லாஹ் விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததேயில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “மண்ணறை வேதனை உண்மை தான்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرني ابي، عن شعبة، سمعت الاشعث، عن ابيه، عن مسروق، عن عايشة رضى الله عنها ان يهودية، دخلت عليها، فذكرت عذاب القبر، فقالت لها اعاذك الله من عذاب القبر. فسالت عايشة رسول الله صلى الله عليه وسلم عن عذاب القبر فقال " نعم عذاب القبر ". قالت عايشة رضى الله عنها فما رايت رسول الله صلى الله عليه وسلم بعد صلى صلاة الا تعوذ من عذاب القبر. زاد غندر " عذاب القبر حق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1372
- Book Index
- 124
Grades
- -
