ஹதீஸ்கள்
#1370
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பத்ர் போரில் கொல்லப்பட்ட எதிரி களின் உடல்கள் ஒரு பாழுங்கிணற்றில் போடப்பட்டிருந்தன. அந்தக்) கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இறைவன் உண்மை யாகவே வாக்களித்தவற்றை நீங்கள் அடைந்துகொண்டீர்களா?” எனக் கேட்டார்கள். “இறந்துவிட்டவர்களை அழைக்கின் றீர்களே?” என அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு “அவர்களைவிட நீங்கள் அதிகம் செவியுறுபவர்களல்லர்; ஆயினும், அவர்கள் பதிலளிக்கமாட் டார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا يعقوب بن ابراهيم، حدثني ابي، عن صالح، حدثني نافع، ان ابن عمر رضى الله عنهما اخبره قال اطلع النبي صلى الله عليه وسلم على اهل القليب فقال " وجدتم ما وعد ربكم حقا ". فقيل له تدعو امواتا فقال " ما انتم باسمع منهم ولكن لا يجيبون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1370
- Book Index
- 122
Grades
- -
