ஹதீஸ்கள்
#1368
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அபுல்அஸ்வத் அத்துஅலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது நான் மதீனாவில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது மதீனாவுக்கு வந்து உமர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந் தேன். அப்போது ஒரு பிரேதம் (ஜனாஸா) மக்களைக் கடந்து சென்றது. அவருடைய நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்துரைக்கப்பட்டது. அப்போது உமர் (ரலி) அவர்கள், “உறுதியாகிவிட்டது” என்றார்கள். பிறகு இன்னொரு பிரேதம் கடந்து சென்றது. அப்போது அவருடைய நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்து பேசப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள், “உறுதியாகிவிட்டது” என்றார்கள். பிறகு மூன்றாவது பிரேதம் கடந்து சென்றது. அவருடைய தீய பண்புகளைக் கூறி இகழ்ந்து பேசப்பட்டது. அப்போதும் உமர் (ரலி) அவர்கள், “உறுதியாகி விட்டது” எனக் கூறினார்கள். நான் “இûறைநம்பிக்கையாளர் களின் தலைவரே! எது உறுதியாகி விட்டது?” எனக் கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: “எந்த முஸ்லிமுக்காவது அவர் நல்லவர் என நான்கு பேர் சாட்சியம் கூறினால், அவரை அல்லாஹ் சொர்க் கத்தில் அனுமதிப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், லி“மூவர் சாட்சியாயிருந் தால்...?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள் “மூன்று பேர் சாட்சியம் கூறினாலும்தான்” என்றார்கள். மீண்டும் “இருவர் சாட்சியாக இருந்தால்...?” என நாங்கள் கேட்டதற்கு, “இரண்டு பேர் சாட்சியம் கூறினாலும்தான்” என்றார்கள். பிறகு நாங்கள் ஒரு நபர் பற்றிக் கேட்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே நான் இவ்வாறு கூறினேன். அத்தியாயம் :
حدثنا عفان بن مسلم، حدثنا داود بن ابي الفرات، عن عبد الله بن بريدة، عن ابي الاسود، قال قدمت المدينة وقد وقع بها مرض، فجلست الى عمر بن الخطاب رضى الله عنه فمرت بهم جنازة فاثني على صاحبها خيرا فقال عمر رضى الله عنه وجبت. ثم مر باخرى فاثني على صاحبها خيرا، فقال عمر رضى الله عنه وجبت. ثم مر بالثالثة، فاثني على صاحبها شرا فقال وجبت. فقال ابو الاسود فقلت وما وجبت يا امير المومنين قال قلت كما قال النبي صلى الله عليه وسلم " ايما مسلم شهد له اربعة بخير ادخله الله الجنة ". فقلنا وثلاثة قال " وثلاثة ". فقلنا واثنان قال " واثنان ". ثم لم نساله عن الواحد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1368
- Book Index
- 120
Grades
- -
