ஹதீஸ்கள்
#1366
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் மரணித்ததும் அவருக்கு (இறுதி)த் தொழுகை நடத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவிக்கத் தயாரானபோது நான் குதித்தெழுந்து அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! அப்துல்லாஹ் பின் உபைக்கு (இறுதித்) தொழுகை நடத்தப்போகிறீர்களா? அவர் இன் னின்ன நாட்களில் இன்னின்னவாறெல் லாம் பேசியுள்ளார்” என, அவர் பேசிய வற்றை நபியவர்களிடம் எடுத்துக் கூறி னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு, “உமரே! என்னைவிட்டு விலகி நிற்பீராக!” எனக் கூறினார்கள். நான் மேலும் அதிகமாக வலியுறுத்திய தும் அவர்கள், “(பாவமன்னிப்புக் கோரல், கோராமல் இருத்தல் ஆகிய இரண்டில் ஒன்றைச் செய்ய) எனக்கு விருப்ப உரிமை அளிக்கப்பட்டுள்ளது. எழுபது தடவை களுக்கும் அதிகமாக நான் பாவமன்னிப் புக் கோரினால் அவருக்கு மன்னிப்பு கிடைக்கும் என நான் அறிந்தால், அவ்வாறே நான் அதிகமாகப் பாவ மன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அவருக்கு (இறுதித் தொழுகை) தொழுவித்துவிட்டுத் திரும்பிச் சென்று சற்று நேரமாவதற்குள், ‘பராஅத்’ (9ஆவது) அத்தியாத்தில், “(நபியே!) அவர்களில் இறந்துவிட்ட யாருக்காகவும் நீர் ஒருபோதும் (இறுதித்) தொழுகை நடத்த வேண்டாம்” (9:84) என்று தொடங்கி இறுதிவரையிலான வசனம், அதற்கு முன்னுள்ள (9:80ஆவது) வசனம் ஆகிய இரு வசனங்கள் அருளப்பெற்றன. பிறகுதான் அன்றைய தினம் நபி (ஸல்) அவர்களிடம் நான் காட்டிய துணிச்சலை எண்ணி வியந்துபோனேன். அல்லாஹ்வும் அவன் தூதரும் நன்கு அறிந்தவர்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثني الليث، عن عقيل، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله، عن ابن عباس، عن عمر بن الخطاب رضى الله عنهم انه قال لما مات عبد الله بن ابى ابن سلول دعي له رسول الله صلى الله عليه وسلم ليصلي عليه، فلما قام رسول الله صلى الله عليه وسلم وثبت اليه فقلت يا رسول الله، اتصلي على ابن ابى وقد قال يوم كذا وكذا كذا وكذا اعدد عليه قوله فتبسم رسول الله صلى الله عليه وسلم وقال " اخر عني يا عمر ". فلما اكثرت عليه قال " اني خيرت فاخترت، لو اعلم اني ان زدت على السبعين فغفر له لزدت عليها ". قال فصلى عليه رسول الله صلى الله عليه وسلم ثم انصرف، فلم يمكث الا يسيرا حتى نزلت الايتان من {براءة} {ولا تصل على احد منهم مات ابدا} الى {وهم فاسقون} قال فعجبت بعد من جراتي على رسول الله صلى الله عليه وسلم يوميذ، والله ورسوله اعلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1366
- Book Index
- 118
Grades
- -
