ஹதீஸ்கள்
#1362
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘பகீஉல் ஃகர்கத்’ எனும் பொது மையவாடியில் ஒரு பிரேத நல்லடக்கத்தில் கலந்துகொண்டோம் அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து உட்கார்ந்ததும், நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்து கொண்டோம். அவர்களிடம் ஒரு சிறிய கைத்தடி இருந்தது. நபி (ஸல்) அவர்கள் தலை குனிந்தவர்களாகத் தமது கைத்தடியால் தரையைக் கீறியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். “உங்களில் ‘யாரும்’ அல்லது ‘பிறந்து விட்ட எந்த உயிரும்’ தமது இருப்பிடம் சொர்க்கமா, அல்லது நரகமா என்று எழுதப்படாமலிருப்பதில்லை; அவ்வாறே, அது நற்பேறற்றதா, நற்பேறு பெற்றதா என்றும் எழுதப்படாமல் இருப்பதில்லை” எனக் கூறினார்கள். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அப்படியாயின், ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டதன்மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நற்செயல்கள் புரியாமல் நாங்கள் இருந்துவிடமாட்டோமா? ஏனெனில், நம்மில் யார் நற்பேறு பெற்றவராக இருப்பாரோ அவர் அந்த நல்லவர்களின் செயலின் பக்கம் செல்லப்போகிறார்; யார் நற்பேறற்றவராக இருப்பாரோ அவர் அந்தக் கெட்டவர்களின் செயலின் பக்கம் செல்லப்போகிறார்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “யார் நற்பேறு பெற்றவர்களோ அவர்களுக்கு நற்செயல் எளிதாக்கப்படும்; யார் நற்பேறற் றவர்களோ அவர்களுக்குக் கெட்ட செயல் எளிதாக்கப்படும்” என்று கூறினார்கள். பிறகு “எவர் தானதர்மம் கொடுத்து, இறையச்சத்துடன் நடந்து, நல்லவற்றை உண்மையாக்குகின்றாரோ...” என்று தொடங்கும் (92:5-10) வசனங்களை ஓதிக் காட்டினார்கள். அத்தியாயம் :
حدثنا عثمان، قال حدثني جرير، عن منصور، عن سعد بن عبيدة، عن ابي عبد الرحمن، عن علي رضى الله عنه قال كنا في جنازة في بقيع الغرقد، فاتانا النبي صلى الله عليه وسلم فقعد وقعدنا حوله، ومعه مخصرة فنكس، فجعل ينكت بمخصرته ثم قال " ما منكم من احد، ما من نفس منفوسة الا كتب مكانها من الجنة والنار، والا قد كتب شقية او سعيدة ". فقال رجل يا رسول الله، افلا نتكل على كتابنا وندع العمل، فمن كان منا من اهل السعادة فسيصير الى عمل اهل السعادة، واما من كان منا من اهل الشقاوة فسيصير الى عمل اهل الشقاوة قال " اما اهل السعادة فييسرون لعمل السعادة، واما اهل الشقاوة فييسرون لعمل الشقاوة "، ثم قرا {فاما من اعطى واتقى} الاية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1362
- Book Index
- 115
Grades
- -
