ஹதீஸ்கள்
#1361
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: வேதனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த இருவரின் அடக்கத் தலங்களைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். அப்போது, “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால், ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர் களில் ஒருவரோ, சிறுநீர் கழிக்கும்போது (உடலை) மறைக்காதவர்; இன்னொரு வரோ கோள்சொல்லித் திரிந்தவர்” என்று கூறினார்கள். பின்னர் ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ்வொன்றை நட்டார் கள். தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று கேட்டதும், “இவ்விரண்டின் ஈரம் காயாத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى، حدثنا ابو معاوية، عن الاعمش، عن مجاهد، عن طاوس، عن ابن عباس رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم انه مر بقبرين يعذبان فقال " انهما ليعذبان وما يعذبان في كبير اما احدهما فكان لا يستتر من البول، واما الاخر فكان يمشي بالنميمة ". ثم اخذ جريدة رطبة فشقها بنصفين، ثم غرز في كل قبر واحدة. فقالوا يا رسول الله، لم صنعت هذا فقال " لعله ان يخفف عنهما ما لم ييبسا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1361
- Book Index
- 114
Grades
- -
