ஹதீஸ்கள்
#1359
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அவ்வாறே, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக் கின்றன. விலங்குகள் அங்கக் குறைவு டன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர் களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதைப் போன்று) பெற்றோர் கள்தான் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களா கவோ கிறித்தவர்களாகவோ அக்னி ஆராதனையாளர்களாகவோ மாற்றிவிடு கின்றனர்.” இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனது (நிலையான) இயற்கை மார்க்க மாகும்; அல்லாஹ்வின் படைப்புக்கு மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும்” (30:30) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا عبد الله، اخبرنا يونس، عن الزهري، اخبرني ابو سلمة بن عبد الرحمن، ان ابا هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " ما من مولود الا يولد على الفطرة، فابواه يهودانه او ينصرانه او يمجسانه، كما تنتج البهيمة بهيمة جمعاء، هل تحسون فيها من جدعاء ". ثم يقول ابو هريرة رضى الله عنه {فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1359
- Book Index
- 112
Grades
- -
