ஹதீஸ்கள்
#1358
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இறந்துவிட்ட எல்லாக் குழந்தை களுக்கும் இறுதித் தொழுகை நடத்தப் படும். அது விபசாரிக்குப் பிறந்ததாக இருந்தாலும் சரியே! ஏனெனில், அது இயற்கையாகவே இஸ்லாத்தில்தான் பிறக்கிறது. குழந்தையின் பெற்றோர் முஸ்லிம் களாக இருந்து, அல்லது குறிப்பாகத் தந்தை மட்டும் முஸ்லிமாகவும் தாய் வேற்று மதத்தவளாகவும் இருந்து, அவர்களின் குழந்தை பிறந்தபோது சப்தமிட்டு, பிறகு இறந்தால் அதற்கு இறுதித் தொழுகை நடத்தப்படும்; சப்தமிடவில்லையாயின் அதற்குத் தொழுகையில்லை; ஏனெனில், அது குறைபேறு (கருச்சிதைவு) ஆகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போன்றே, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதைப் போன்று) பெற்றோர்கள்தான் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர் களாகவோ அக்னி ஆராதனையாளர்களாகவோ மாற்றிவிடுகின்றனர்” என்று கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனது (நிலையான) இயற்கை மார்க்க மாகும்; அல்லாஹ்வின் படைப்புக்கு மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்” (30:30) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، قال ابن شهاب يصلى على كل مولود متوفى وان كان لغية، من اجل انه ولد على فطرة الاسلام، يدعي ابواه الاسلام او ابوه خاصة، وان كانت امه على غير الاسلام، اذا استهل صارخا صلي عليه، ولا يصلى على من لا يستهل من اجل انه سقط، فان ابا هريرة رضى الله عنه كان يحدث قال النبي صلى الله عليه وسلم " ما من مولود الا يولد على الفطرة، فابواه يهودانه او ينصرانه او يمجسانه، كما تنتج البهيمة بهيمة جمعاء هل تحسون فيها من جدعاء ". ثم يقول ابو هريرة رضى الله عنه – {فطرة الله التي فطر الناس عليها} الاية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1358
- Book Index
- 111
Grades
- -
