ஹதீஸ்கள்
#1336
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
சுலைமான் பின் அபீசுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள், தனியாக இருந்த ஓர் அடக்கத் தலத்திற்கு (கப்று) வந்து, மக்களுக்கு இமாமாக இருந்து (இறுதித்) தொழுகை நடத்தினார்கள். (தோழர்கள்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதார்கள்” என்று அங்கு நபி (ஸல்) அவர்களுடன் இருந்த ஒருவர் எனக்குக் கூறினார் என ஷஅபீ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அப்போது நான், “அம்ரின் தந்தை(யான ஷஅபீ)யே! உமக்கு இதை அறிவித்தவர் யார்?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்தான்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا حجاج بن منهال، حدثنا شعبة، قال حدثني سليمان الشيباني، قال سمعت الشعبي، قال اخبرني من، مر مع النبي صلى الله عليه وسلم على قبر منبوذ فامهم وصلوا خلفه. قلت من حدثك هذا يا ابا عمرو قال ابن عباس رضى الله عنهما
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1336
- Book Index
- 91
Grades
- -
