ஹதீஸ்கள்
#1314
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தம் தோள்களில் தூக்கிச் செல்லும்போது அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், “என்னை விரைந்து கொண்டுசெல்லுங் கள்” என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், “நாசமே! என்னை எங்கே கொண்டுசெல்கிறார் கள்?” என்று கூறும். இவ்வாறு அது கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்துப் பொருட் களும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மூர்ச்சையாகிவிடுவான். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا الليث، عن سعيد المقبري، عن ابيه، انه سمع ابا سعيد الخدري رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا وضعت الجنازة واحتملها الرجال على اعناقهم، فان كانت صالحة قالت قدموني. وان كانت غير صالحة قالت يا ويلها اين يذهبون بها يسمع صوتها كل شىء الا الانسان، ولو سمعه صعق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1314
- Book Index
- 71
Grades
- -
