ஹதீஸ்கள்
#1305
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : (மூத்தா போரில்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி), ஐஅஃபர் பின் அபீ தாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப் பட்ட செய்தி வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளியில் நபி (ஸல்) அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஜஅஃபர் (ரலி) அவர்களின் வீட்டுப் பெண்கள் (ஒப்பாரிவைத்து) அழுகிறார்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள். அவர் சென்று திரும்பிவந்து, “நான் தடுத்தேன்: அவர்கள் எனது சொல்லுக்குக் கட்டுப்படவில்லை” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், “(நீர் சென்று) அவர்களைத் தடுத்து நிறுத்துவீராக!” என இரண்டாவது முறையாகக் கட்டளையிட்டார்கள். மீண்டும் அவர் சென்றுவிட்டு வந்து, “அல்லாஹ் வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணை யாக! ‘என்னை (அப்பெண்கள்) மிஞ்சி விட்டனர்’ அல்லது ‘நம்மை அவர்கள் மிஞ்சிவிட்டனர்’ என்றார். அப்போது “அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் (கடிந்து) கூறினார்கள் என நான் நினைக்கிறேன். பின்னர் அவரை நோக்கி, “அல்லாஹ் உமது மூக்கை மண்ணைக் கவ்வச்செய்வானாக! நபி (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம் மால் செய்ய முடியவில்லை: நபியவர் களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை” எனக் கூறினேன். அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الله بن حوشب، حدثنا عبد الوهاب، حدثنا يحيى بن سعيد، قال اخبرتني عمرة، قالت سمعت عايشة رضى الله عنها تقول لما جاء قتل زيد بن حارثة وجعفر وعبد الله بن رواحة، جلس النبي صلى الله عليه وسلم يعرف فيه الحزن، وانا اطلع من شق الباب، فاتاه رجل فقال يا رسول الله ان نساء جعفر وذكر بكاءهن فامره بان ينهاهن، فذهب الرجل ثم اتى فقال قد نهيتهن، وذكر انهن لم يطعنه، فامره الثانية ان ينهاهن، فذهب، ثم اتى، فقال والله لقد غلبنني او غلبننا الشك من محمد بن حوشب فزعمت ان النبي صلى الله عليه وسلم قال " فاحث في افواههن التراب ". فقلت ارغم الله انفك، فوالله ما انت بفاعل وما تركت رسول الله صلى الله عليه وسلم من العناء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1305
- Book Index
- 63
Grades
- -
