ஹதீஸ்கள்
#1301
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியவதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்களின் ஆண் குழந்தை ஒன்று நோயுற்றிருந்தது. ஒரு நாள் அபூதல்ஹா (ரலி) அவர்கள் வெளியே சென்றிருந்தபோது அக் குழந்தை இறந்துவிட்டது. இதைக் கண்ட அபூதல்ஹா (ரலி) அவர்களின் துணை வியார் உடனே சிறிது (உணவைத்) தயார் செய்தார். பிறகு குழந்தையின் பிரே தத்தை வீட்டின் ஒரு மூலையில் வைத்தார். வெளியே சென்றிருந்த அபூதல்ஹா (ரலி) அவர்கள் வீடு திரும்பியவுடன், “மகன் எவ்வாறுள்ளான்?” எனக் கேட்டார்கள். அதற்கு அவருடைய மனைவி, “அமைதியாகிவிட்டான்; நிம்மதி (ஓய்வு) பெற்றுவிட்டிருப்பான் என்பதே எனது எதிர்பார்ப்பு” எனப் பதிலளித்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் மனைவி கூறியது உண்மைதான் என்றெண்ணி (நிம்மதி யுடன் தம் மனைவியோடு) இரவைக் கழித்தார். பொழுது விடிந்து நீராடிவிட்டு (தொழுகைக்காக) வெளியே செல்ல அபூதல்ஹா (ரலி) அவர்கள் நாடியபோது, மகன் இறந்துவிட்டதை மனைவி கூறினார். அபூதல்ஹா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது இல்லத்தில் நடந்ததை நபியவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள்வளம் செய்யக்கூடும்” என்றார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை நான் பார்த் தேன். அவர்கள் அனைவரும் குர்ஆன் அறிஞர்களாக இருந்தனர் என மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார். அத்தியாயம் :
حدثنا بشر بن الحكم، حدثنا سفيان بن عيينة، اخبرنا اسحاق بن عبد الله بن ابي طلحة، انه سمع انس بن مالك رضى الله عنه يقول اشتكى ابن لابي طلحة قال فمات وابو طلحة خارج، فلما رات امراته انه قد مات هيات شييا ونحته في جانب البيت، فلما جاء ابو طلحة قال كيف الغلام قالت قد هدات نفسه، وارجو ان يكون قد استراح. وظن ابو طلحة انها صادقة، قال فبات، فلما اصبح اغتسل، فلما اراد ان يخرج، اعلمته انه قد مات، فصلى مع النبي صلى الله عليه وسلم ثم اخبر النبي صلى الله عليه وسلم بما كان منهما، فقال رسول الله صلى الله عليه وسلم " لعل الله ان يبارك لكما في ليلتكما ". قال سفيان فقال رجل من الانصار فرايت لهما تسعة اولاد كلهم قد قرا القران
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1301
- Book Index
- 59
Grades
- -
