ஹதீஸ்கள்
#1295
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம், “(அல்லாஹ்வின் தூதரே!) எனக்குக் கடுமையான நோய் ஏற்பட்டுவிட்டது. நான் தனவந்தன்; ஒரு மகளைத் தவிர வேறு யாரும் எனக்கு வாரிசுக்காரர்கள் இல்லை: எனவே, எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பாகம் நான் தர்மம் செய்துவிடட்டுமா?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்” என்றார்கள். பின்னர் நான், “பாதியை(க் கொடுக் கட்டுமா)?” எனக் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்: மூன்றில் ஒரு பாகம் வேண்டுமானால் தர்மம் செய்வீராக! அதுவும் அதிகம் தான்; ஏனெனில், உம்முடைய வாரிசு களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச்செல்வதைவிட தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. அல்லாஹ்வின் அன்பை வேண்டி நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படாமல் இருப்பதில்லை; நீர் உம்முடைய மனைவியின் வாயில் இடுகின்ற உணவுக் கவளத்திற்கும்கூட (உமக்கு நன்மையுண்டு)” என்று கூறினார்கள். நான் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! (என் தோழர்களெல்லாரும் மதீனாவுக்குச் சென்றுவிடுவார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) பின்தங்கியவனாக ஆகிவிடுவேனே!” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் இங்கு இருந்தபோதிலும் நல்லறங்கள் செய்துகொண்டே இருந்தால், உமது தகுதியும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும்” எனக் கூறிவிட்டு, “உம்மை வைத்துச் சில கூட்டத்தார் நன்மை அடைவதற்காகவும் வேறுசிலர் துன்பம் அடைவதற்காகவும் நீர் இங்கேயே தங்க வைக்கப்படலாம்” என்று கூறினார்கள்.20 பின்னர் “இறைவா! என் தோழர் களின் ஹிஜ்ரத்தை முழுமையாக்கு வாயாக! அவர்களைத் தம் கால் சுவடு களின் வழியே (முந்திய மார்க்கத்திற்கே) திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே!” எனப் பிரார்த்தித்தார்கள். நோயாளியாயிருந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் மக்காவிலேயே இறந்துவிட்டதற்காக “பாவம் சஅத் பின் கவ்லா (அவர் நினைத்தது நடக்க வில்லை)” என்று நபி (ஸல்) அவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள்.21 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن عامر بن سعد بن ابي وقاص، عن ابيه رضى الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يعودني عام حجة الوداع من وجع اشتد بي فقلت اني قد بلغ بي من الوجع وانا ذو مال، ولا يرثني الا ابنة، افاتصدق بثلثى مالي قال " لا ". فقلت بالشطر فقال " لا " ثم قال " الثلث والثلث كبير او كثير انك ان تذر ورثتك اغنياء خير من ان تذرهم عالة يتكففون الناس، وانك لن تنفق نفقة تبتغي بها وجه الله الا اجرت بها، حتى ما تجعل في في امراتك ". فقلت يا رسول الله، اخلف بعد اصحابي قال " انك لن تخلف فتعمل عملا صالحا الا ازددت به درجة ورفعة، ثم لعلك ان تخلف حتى ينتفع بك اقوام ويضر بك اخرون، اللهم امض لاصحابي هجرتهم، ولا تردهم على اعقابهم، لكن البايس سعد ابن خولة، يرثي له رسول الله صلى الله عليه وسلم ان مات بمكة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1295
- Book Index
- 53
Grades
- -
