ஹதீஸ்கள்
#1288
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்காவில் உஸ்மான் (ரலி) அவர் களுடைய மகள் (உம்மு அபான்) இறந்த போது நாங்கள் (ஜனாஸாவில்) கலந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். அங்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வந்திருந்தனர். நான் ‘அவர்களிருவருக் கும் நடுவில்’ அல்லது ‘அவர்களில் ஒருவருக்கு அருகில்’ அமர்ந்திருந்தேன். பிறகு மற்றொருவர் வந்து என்னருகில் அமர்ந்தார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) உடைய மகன் அம்ர் (ரஹ்) அவர்களிடம், “(சப்த மிட்டு) அழுபவர்களை நீர் தடுக்க வேண்டாமா? ஏனெனில், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘குடும்பத் தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ எனக் கூறியுள்ளார்கள்” என்றார்கள். உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “உமர் (ரலி) அவர்கள் இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறிக் கொண்டிருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்டேன். நாங்கள் ‘பைதா’ எனும் இடத்தை அடைந்தோம். அங்கு கருவேல மரத்தின் நிழலில் ஒரு பயணக் கூட்டம் நிற்பதைக் கண்டோம். அப்போது “நீர் சென்று அப்பயணக் கூட்டம் யாரெனப் பார்த்து வாரீர்’ என உமர் (ரலி) அவர்கள் என்னை அனுப்பினார்கள். நான் அங்கு (சென்று) பார்த்தபோது அங்கே ஸுஹைப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அதை உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். “அவரை என்னிடம் அழைத்து வாரீர்” என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் ஸுஹைப் அவர்களிடம் சென்று, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (அமீருல் முஃமினீன்) அவர்களைச் சந்திக்கப் புறப்படுங்கள்” எனக் கூறினேன். பின்னர் (சிறிது காலம் கழித்து) உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்ட போது, ‘சகோதரரே! நண்பரே!’ எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத் தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார் களல்லவா?” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள் இறந்தபோது, (அவர்கள்) இறப்பதற்குமுன் கூறிய செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உமருக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை (முஃமின்) அல்லாஹ் வேதனை செய்வான்’ எனக் கூறவில்லை. மாறாக, ‘குடும்பத்தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணத்தால் இறைமறுப்பாளருக்கு அல்லாஹ் நிச்சயமாக வேதனையை அதிகமாக்குகிறான்’ என்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு, ‘பாவியான எவரும் மற்றவரின் பாவத்தைச் சுமப்பதில்லை” (6:164) எனும் இறைவசனம் உங்களுக்குப் போதுமே” என்றும் கூறினார்கள். இதைக் கூறி முடித்த பொழுது “சிரிக்கச் செய்பவனும் அழ வைப்பவ னும் அவனே” (53:43) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இச் சொல்லைத் செவியுற்ற அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இதைப் பற்றி எதுவும் கூறவில்லை” என்று இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறி னார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1288
- Book Index
- 46
Grades
- -