ஹதீஸ்கள்
#1285
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மகள் (ஒருவரை அடக்கம் செய்யும்போது அவருக்கு) அருகே நாங்கள் இருந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குழியின் அருகே அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களின் கண்கள் கண்ணீர் வடித்ததை நான் கண்டேன். “இன்றிரவு தம் மனைவியோடு தாம்பத்திய உறவு கொள்ளாதவர் யாரேனும் உங்களில் உண்டா?”என வினவினார்கள். “நான் உள்ளேன்” என அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியவுடன், அவரை குழியினுள் இறங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவரும் (நபியவர்களின் மகளுடைய) குழிக்குள் இறங்கினார்.17 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا ابو عامر، حدثنا فليح بن سليمان، عن هلال بن علي، عن انس بن مالك رضى الله عنه قال شهدنا بنتا لرسول الله صلى الله عليه وسلم قال ورسول الله صلى الله عليه وسلم جالس على القبر قال فرايت عينيه تدمعان قال فقال " هل منكم رجل لم يقارف الليلة ". فقال ابو طلحة انا. قال " فانزل ". قال فنزل في قبرها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1285
- Book Index
- 45
Grades
- -
