ஹதீஸ்கள்
#1284
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மகள் (ஸைனப்-ரலி) தம் மகன் இறக்கும் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி (ஸல்) அவர்கள், தம் மகளுக்கு சலாம் கூறி அனுப்பியதோடு, “எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்ப்பீராக!” என்றும் கூறி அனுப்பினார்கள். அப்போது அவர்களுடைய மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத் பின் ஜபல், உபை பின் கஅப், ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந் தனர். (வீட்டுக்குச் சென்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டி ருந்த குழந்தை எடுத்துத் தரப்பட்டது. இற்றுப்போன பழைய தோல்துருத்தி போல் (குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது.) நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. அப்போது “அல்லாஹ்வின் தூதரே! என்ன இது (அழுகிறீர்கள்)?” என சஅத் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இது, அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார் களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا عبدان، ومحمد، قالا اخبرنا عبد الله، اخبرنا عاصم بن سليمان، عن ابي عثمان، قال حدثني اسامة بن زيد رضى الله عنهما قال ارسلت ابنة النبي صلى الله عليه وسلم اليه ان ابنا لي قبض فايتنا. فارسل يقري السلام ويقول " ان لله ما اخذ وله ما اعطى وكل عنده باجل مسمى، فلتصبر ولتحتسب ". فارسلت اليه تقسم عليه لياتينها، فقام ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وابى بن كعب وزيد بن ثابت ورجال، فرفع الى رسول الله صلى الله عليه وسلم الصبي ونفسه تتقعقع قال حسبته انه قال كانها شن. ففاضت عيناه. فقال سعد يا رسول الله ما هذا فقال " هذه رحمة جعلها الله في قلوب عباده، وانما يرحم الله من عباده الرحماء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1284
- Book Index
- 44
Grades
- -
