ஹதீஸ்கள்
#1277
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள், “ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களி டம் ஓரத்தில் குஞ்சம் கட்டப்பட்ட சால்வை (புர்தா) ஒன்றைக் கொண்டு வந்தார்“ என்று கூறிவிட்டு, ‘புர்தா’ என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். (அங்கி ருந்தோர்) “ஆம்! புர்தா என்பது சால்வைதானே!” என்றனர். சஹ்ல் (ரலி) அவர்கள், ஆம் எனக் கூறிவிட்டுத் தொடர்ந்தார்கள்: அப்பெண்மணி, “நான் எனது கையாலேயே இதை நெய்திருக்கிறேன். இதை உங்களுக்கு அணிவிக்கவே நான் கொண்டுவந்தேன்” என்றார். அது தேவை யாயிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்துகொண்டு எங்களிடம் வந்தபோது ஒருவர், “இது எவ்வளவு அழகாக இருக்கிறது! எனக்கு இதை நீங்கள் அணியக் கொடுத்துவிடுங்கள்” என்று கேட்டார். உடனே அங்கிருந் தோர், “நீர் செய்வது முறையன்று; நபி (ஸல்) அவர்களுக்கு அது தேவைப் பட்டதால்தான் அதை அணிந்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள், கேட்பவர் களுக்குக் கொடுக்காமலிருக்கமாட்டார்கள் என்று தெரிந்துகொண்டே நீர் அதை அவர்களிடம் கேட்டுவிட்டீரே” எனக் கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை (சாதாரண மாக) அணிந்துகொள்வதற்காகக் கேட்க வில்லை; அது எனக்குப் பிரேத ஆடை (கஃபன்) ஆகிவிட வேண்டும் என்றே கேட்டேன்” என்றார். பின்பு அது அவருக்கு கஃபனாகவே ஆகிவிட்டது என்று சஹ்ல் (ரலி) அவர்கள் கூறி னார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، حدثنا ابن ابي حازم، عن ابيه، عن سهل رضى الله عنه ان امراة، جاءت النبي صلى الله عليه وسلم ببردة منسوجة فيها حاشيتها اتدرون ما البردة قالوا الشملة. قال نعم. قالت نسجتها بيدي، فجيت لاكسوكها. فاخذها النبي صلى الله عليه وسلم محتاجا اليها، فخرج الينا وانها ازاره، فحسنها فلان فقال اكسنيها، ما احسنها. قال القوم ما احسنت، لبسها النبي صلى الله عليه وسلم محتاجا اليها، ثم سالته وعلمت انه لا يرد. قال اني والله ما سالته لالبسها انما سالته لتكون كفني. قال سهل فكانت كفنه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1277
- Book Index
- 38
Grades
- -
