ஹதீஸ்கள்
#1275
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நோன்பாளியாக இருந்த (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு (நோன்பை நிறைவு செய்வதற்காக) உணவு கொண்டுவரப் பட்டது. அப்போது அவர்கள், “என்னை விடச் சிறந்தவரான முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது, அவரது உடலுக்கு ஒரு சால்வையால் ‘கஃபன்’ இடப்பட்டது. அப்போது அவரின் தலை மறைக்கப்பட்டால் அவரின் கால்கள் வெளியில் தெரிந்தன; கால்கள் மறைக்கப்பட்டால் தலை வெளியில் தெரிந்தது. மேலும், ஹம்ஸா (ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள். அவரும் என்னைவிடச் சிறந்தவர்தான் (அவரும் அது போலவே பற்றாக்குறையான சிறிய சால்வையாலேயே கஃபன் இடப்பட்டார்கள்.) பிறகு ‘(அந்த ஏழ்மை நிலை நம்மை விட்டு நீங்கி, இதோ, நீங்கள் காண்கி றீர்களே) இந்த அளவு நமக்கு இந்த உலகின் வசதி வாய்ப்புகள் வழங்கப் பட்டன’ அல்லது ‘இந்த உலக(ச் செல்வ)த் திலிருந்து (இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவு நமக்குத் தரப்பட்டது.’ நாம் புரிந்த நல்லறங்களுக்குப் பிரதிபலன் மிக விரைவாக (இவ்வுலகிலேயே) நமக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதோ என நாம் அஞ்சுகிறோம்” என்று கூறினார்கள். பிறகு (தமக்காகக் கொண்டுவரப்பட்ட) உணவை உண்ணாமல் (அப்படியே) விட்டுவிட்டு அழலானார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، اخبرنا عبد الله، اخبرنا شعبة، عن سعد بن ابراهيم، عن ابيه، ابراهيم ان عبد الرحمن بن عوف رضى الله عنه اتي بطعام وكان صايما فقال قتل مصعب بن عمير وهو خير مني، كفن في بردة، ان غطي راسه بدت رجلاه، وان غطي رجلاه بدا راسه واراه قال وقتل حمزة وهو خير مني، ثم بسط لنا من الدنيا ما بسط او قال اعطينا من الدنيا ما اعطينا وقد خشينا ان تكون حسناتنا عجلت لنا، ثم جعل يبكي حتى ترك الطعام
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1275
- Book Index
- 36
Grades
- -
