ஹதீஸ்கள்
#1269
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துபோனார். அப்போது அவரது (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மேலங்கியைத் தாருங்கள்; அவருக்கு அதில் சவக்கோடி (கஃபன்) அணிவிக்க வேண்டும்; மேலும், நீங்கள் அவருக்கு இறுதித் தொழுகை நடத்தி, அவருக்காகப் பாவமன்னிப்பும் கோர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது மேலங்கியை அவருக்குக் கொடுத்து விட்டு, “(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் அவருக்குத் தொழுவிக்கிறேன்” என்றார்கள். அவ்வாறே அவர் அறிவித்ததும் நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வுக்கு இறுதித் தொழுகை நடத்த நாடியபோது, உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர் களை இழுத்து, நயவஞ்சகர்களுக்கு நீங்கள் இறுதித் தொழுகை நடத்தக் கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் (பாவமன்னிப்புக் கோரல், கோராமலிருத்தல் ஆகிய) இரு விருப்ப உரிமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறிவிட்டு, “(நபியே!) அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரும்; அல்லது பாவமன்னிப்புக் கேராமல் இரும்; நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்” (9:80) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். பிறகு அவருக்கு (இறுதித்) தொழுகை நடத்தினார்கள். அப்போது “(நபியே!) அவர்களில் இறந்துவிட்ட யாருக்காகவும் நீர் ஒருபோதும் (இறுதித்) தொழுகை நடத்த வேண்டாம்” (9:84) எனும் இறைவசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى بن سعيد، عن عبيد الله، قال حدثني نافع، عن ابن عمر رضى الله عنهما ان عبد، الله بن ابى لما توفي جاء ابنه الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله اعطني قميصك اكفنه فيه، وصل عليه واستغفر له، فاعطاه النبي صلى الله عليه وسلم قميصه فقال " اذني اصلي عليه ". فاذنه، فلما اراد ان يصلي عليه جذبه عمر رضى الله عنه فقال اليس الله نهاك ان تصلي على المنافقين فقال " انا بين خيرتين قال {استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم} ". فصلى عليه فنزلت {ولا تصل على احد منهم مات ابدا}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1269
- Book Index
- 30
Grades
- -
