ஹதீஸ்கள்
#1266
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இஹ்ராம் கட்டியிருந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தங்கியிருந்தார். திடீரென அவர், தமது ஊர்தி ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார்; அது அவரது கழுத்தை மிதித்து முறித்துவிட்டது. (எனவே, அவர் இறந்துவிட்டார்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டி இரு ஆடை களால் சவக்கோடி (கஃபன்) அணி வியுங்கள்; (மற்றவர்களுக்குப் பூசுவதைப் போன்று) அவரது உடலுக்கு வாசனைத் தூள் போடவேண்டாம்; அவரது தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில், (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் மறுமை நாளில் ‘தல்பியா’ (லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்...) சொன்னவராக எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا حماد، عن ايوب، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال بينما رجل واقف مع رسول الله صلى الله عليه وسلم بعرفة اذ وقع من راحلته فاقصعته او قال فاقعصته فقال رسول الله صلى الله عليه وسلم " اغسلوه بماء وسدر، وكفنوه في ثوبين، ولا تحنطوه ولا تخمروا راسه، فان الله يبعثه يوم القيامة ملبيا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1266
- Book Index
- 27
Grades
- -
