ஹதீஸ்கள்
#1265
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இஹ்ராம் கட்டிய) ஒருவர் ‘அரஃபா’ மைதானத்தில் தங்கியிருந்தார். திடீரென அவர் தமது ஊர்தி ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். அது அவரது கழுத்தை முறித்து(க் கொன்று)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் நீராட்டி, இரு ஆடைகளால் சவக்கோடி (கஃபன்) அணிவியுங்கள்; அவரது உடலுக்கு வாசனைத் தூள் போட வேண்டாம்; அவரது தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில், (இஹ்ராம் கட்டியிருந்த) அவர் மறுமை நாளில் ‘தல்பியா’ (லப்பைக்...) சொன்னவராக எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد بن زيد، عن ايوب، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهم قال بينما رجل واقف بعرفة اذ وقع عن راحلته فوقصته او قال فاوقصته قال النبي صلى الله عليه وسلم " اغسلوه بماء وسدر، وكفنوه في ثوبين، ولا تحنطوه ولا تخمروا راسه، فانه يبعث يوم القيامة ملبيا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1265
- Book Index
- 26
Grades
- -
