ஹதீஸ்கள்
#1263
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் புதல்வியரில் ஒருவர் இறந்துவிட்டதும் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “சடலத்தை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவை யெனக் கருதினால் அதற்கும் அதிகமாக ஒற்றைப்படையாக நீராட்டுங்கள். கடைசி யில் ‘கற்பூரத்தை’ அல்லது ‘கற்பூரத்தில் சிறிதளவை’ச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்” எனக் கூறினார்கள். நீராட்டி முடித்து தெரிவித்ததும் தமது கீழாடையை (சடலத்தில் சுற்றுவதற்காக) எங்களிடம் தந்தார்கள். மேலும், நாங்கள் சடலத்தின் முடியை மூன்று சடைகளாகப் பின்னி அதைச் சடலத்தின் முதுகுப் புறமாகப் போட்டு வைத்தோம். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى بن سعيد، عن هشام بن حسان، قال حدثتنا حفصة، عن ام عطية رضى الله عنها قالت توفيت احدى بنات النبي صلى الله عليه وسلم فاتانا النبي صلى الله عليه وسلم فقال " اغسلنها بالسدر وترا ثلاثا او خمسا او اكثر من ذلك ان رايتن ذلك، واجعلن في الاخرة كافورا او شييا من كافور، فاذا فرغتن فاذنني ". فلما فرغنا اذناه، فالقى الينا حقوه، فضفرنا شعرها ثلاثة قرون والقيناها خلفها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1263
- Book Index
- 24
Grades
- -
