ஹதீஸ்கள்
#1261
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களிடம்) உறுதி மொழிப் பிரமாணம் அளித்திருந்த அன் சாரிப் பெண்மணி உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் தம் மகனைக் காண்பதற் காக பஸ்ராவுக்கு வந்தார். மகனைச் சந்திக்க முடியவில்லை. அப்போது அவர் எங்களிடம் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மகளை நாங்கள் நீராட்டிக்கொண்டி ருந்தபோது அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள், “சடலத்தை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமான தடவைகள் இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவி யுங்கள்” எனக் கூறினார்கள். நீராட்டி முடித்ததும் எங்களிடம் தமது கீழாடையைத் தந்து, “இதை அவரது உடலில் சுற்றுங்கள்” என்று கூறி னார்கள். இதற்கு அதிகமாக இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் எதையும் அறிவிக்கவில்லை. (அவருடைய சகோதரி ஹஃப்ஸா, இதைவிடக் கூடுதல் தகவல் அறிவித்துள்ளார்.) “நபி (ஸல்) அவர்களின் புதல்வியரில் இவர் யார் என்பது எனக்குத் தெரிய வில்லை” என்று அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மேலும், ‘உடலில் சுற்றுதல்’ என்பதே (மூலத்தில் இடம்பெற்றுள்ள) ‘இஷ்ஆர்’ என்பதன் பொருளாகும் என்று அய்யூப் (ரஹ்) அவர்கள் கருதுகிறார்கள். பெண் சடலத்துக்கு இடுப்பில் துணியைக் கட்டத் தேவையில்லை; ஆயினும், (உடம்பில்) சுற்ற வேண்டும் என்றே இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கட்டளையிட்டு வந்தார்கள். அத்தியாயம் :
حدثنا احمد، حدثنا عبد الله بن وهب، اخبرنا ابن جريج، ان ايوب، اخبره قال سمعت ابن سيرين، يقول جاءت ام عطية رضى الله عنها امراة من الانصار من اللاتي بايعن، قدمت البصرة، تبادر ابنا لها فلم تدركه فحدثتنا قالت دخل علينا النبي صلى الله عليه وسلم ونحن نغسل ابنته فقال " اغسلنها ثلاثا او خمسا او اكثر من ذلك ان رايتن ذلك بماء وسدر، واجعلن في الاخرة كافورا، فاذا فرغتن فاذنني ". قالت فلما فرغنا القى الينا حقوه فقال " اشعرنها اياه ". ولم يزد على ذلك، ولا ادري اى بناته. وزعم ان الاشعار الففنها فيه، وكذلك كان ابن سيرين يامر بالمراة ان تشعر ولا توزر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1261
- Book Index
- 22
Grades
- -
