ஹதீஸ்கள்
#1254
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் மகளை நாங்கள் நீராட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த அவர்கள், “அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங் கள்” எனக் கூறினார்கள். முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தமது கீழாடையைத் தந்து, “இதை அவரது உடலில் சுற்றுங்கள்” எனக் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “ஒற்றைப் படையாக(த் தண்ணீர் ஊற்றி) நீராட்டுங்கள்; -மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு தடவைகள் (தண்ணீர் ஊற்றுங்கள்)- அவரது வலப் புறத்திலிருந்தும் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. மேலும், “நாங்கள் அவருக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னி னோம்” என உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாகவும் காணப்படுகிறது. அத்தியாயம் :
حدثنا محمد، حدثنا عبد الوهاب الثقفي، عن ايوب، عن محمد، عن ام عطية رضى الله عنها قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نغسل ابنته فقال " اغسلنها ثلاثا او خمسا او اكثر من ذلك بماء وسدر، واجعلن في الاخرة كافورا، فاذا فرغتن فاذنني ". فلما فرغنا اذناه، فالقى الينا حقوه فقال " اشعرنها اياه ". فقال ايوب وحدثتني حفصة بمثل حديث محمد وكان في حديث حفصة " اغسلنها وترا ". وكان فيه : " ثلاثا او خمسا او سبعا ". وكان فيه انه قال " ابدان بميامنها ومواضع الوضوء منها ". وكان فيه ان ام عطية قالت ومشطناها ثلاثة قرون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1254
- Book Index
- 16
Grades
- -
