ஹதீஸ்கள்
#1253
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் புதல்வி இறந்தபோது எங்களிடம் வந்து, “அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து முறை, தேவையெனக் கருதினால் அதற்கு அதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; இறுதியில் ‘கற்பூரத்தை’ அல்லது ‘கற்பூரத்தில் சிறிதளவை’ச் சேர்த்துக்கொள்ளுங் கள்; நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்” எனக் கூறினார்கள். நாங்கள் நீராட்டி முடித்ததும் நபியவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தமது கீழாடையைத் தந்து, “இதை அவரது உடலில் சுற்றுங்கள்” எனக் கூறினார்கள்.11 அத்தியாயம் :
حدثنا اسماعيل بن عبد الله، قال حدثني مالك، عن ايوب السختياني، عن محمد بن سيرين، عن ام عطية الانصارية رضى الله عنها قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم حين توفيت ابنته فقال " اغسلنها ثلاثا او خمسا او اكثر من ذلك ان رايتن ذلك بماء وسدر، واجعلن في الاخرة كافورا او شييا من كافور، فاذا فرغتن فاذنني ". فلما فرغنا اذناه فاعطانا حقوه فقال " اشعرنها اياه ". تعني ازاره
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1253
- Book Index
- 15
Grades
- -
