ஹதீஸ்கள்
#1251
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: ஒரு முஸ்லிமுடைய மூன்று குழந் தைகள் இறந்துவிட்டால், (எல்லாருமே நரகத்தைக் கடந்து சென்றாக வேண்டும் என்ற) சத்தியத்தை நிறைவேற்றும் வகையில், அந்த நேரம் மட்டுமே தவிர (வேறு சமயத்தில்) அவர் நரகத்தின் பக்கம் செல்லவேமாட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (சத்தியத்தை நிறைவேற்றல் என்பது,) “உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தைக் கடக்காமல் இருக்க இயலாது” (19:71) எனும் வசனத்தைக் குறிக்கிறது. அத்தியாயம் :
حدثنا علي، حدثنا سفيان، قال سمعت الزهري، عن سعيد بن المسيب، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " لا يموت لمسلم ثلاثة من الولد، فيلج النار الا تحلة القسم ". قال ابو عبد الله {وان منكم الا واردها}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1251
- Book Index
- 13
Grades
- -
