ஹதீஸ்கள்
#1247
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நோயுற்றிருந்த) ஒருவரை நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக நலம் விசாரிப்ப வர்களாக இருந்தார்கள். ஒரு நாள் இரவு அவர் இறந்துவிட்டார். அவரை மக்கள் இரவிலேயே அடக்கம் செய்து விட்டனர். மறுநாள் காலையில் நபி (ஸல்) அவர்களுக்கு இச்செய்தியை மக்கள் தெரிவித்ததும், “இதை அப் போதே எனக்கு நீங்கள் அறிவிக்காத தன் காரணமென்ன?” என்று கேட் டார்கள். அதற்கு மக்கள், “கடுமையான இருள் சூழ்ந்த இரவு நேரமாக இருந்ததால் உங்களுக்குச் சிரமம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை” என்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள், அவரது அடக்கத் தலத்திற்கு (கப்று) வந்து இறுதித் தொழுகை தொழுவித்தார்கள்.8 அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا ابو معاوية، عن ابي اسحاق الشيباني، عن الشعبي، عن ابن عباس رضى الله عنهما قال مات انسان كان رسول الله صلى الله عليه وسلم يعوده فمات بالليل فدفنوه ليلا، فلما اصبح اخبروه فقال " ما منعكم ان تعلموني ". قالوا كان الليل فكرهنا وكانت ظلمة ان نشق عليك. فاتى قبره فصلى عليه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1247
- Book Index
- 10
Grades
- -
