ஹதீஸ்கள்
#1244
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (உஹுத் போரில்) கொல்லப்பட்டுக் கிடந்தபோது, நான் அழுது கொண்டே அவரது முகத்தின் மீதிருந்த துணியை அகற்றலானேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார் கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை. பிறகு எனது மாமி ஃபாத்திமா (ரலி) அவர்களும் அழ ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது, “நீங்கள் அழுதாலும் அழாவிட்டாலும் நீங்கள் அவரைத் தூக்கும்வரை வானவர்கள் அவருக்குத் தங்களின் இறக்கைகளால் தொடர்ந்து நிழல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، قال سمعت محمد بن المنكدر، قال سمعت جابر بن عبد الله رضى الله عنهما قال لما قتل ابي جعلت اكشف الثوب عن وجهه ابكي، وينهوني عنه والنبي صلى الله عليه وسلم لا ينهاني، فجعلت عمتي فاطمة تبكي، فقال النبي صلى الله عليه وسلم " تبكين او لا تبكين، ما زالت الملايكة تظله باجنحتها حتى رفعتموه ". تابعه ابن جريج اخبرني ابن المنكدر سمع جابرا رضى الله عنه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1244
- Book Index
- 7
Grades
- -
