ஹதீஸ்கள்
#1243
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்தி ருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் எவர் வீட்டில் தங்குவது என்பதை அறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக்கொண்டிருந்தபோது, உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் எங்கள் பொறுப்பில் வந்தார்கள். அதன்படி அவரை நாங்கள் எங்கள் வீட்டில் தங்கவைத்தோம். பிறகு அவர் நோயுற்று அந்த நோயிலேயே இறந்தும்போனார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிடப் பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), “ஸாயிபின் தந்தையே! உம்மீது இறை யருள் பொழியட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கி றேன்” எனக் கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள், “அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தி யுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ் வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?” என நான் கேட்டேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், “இவர் இறந்துவிட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவருக்கு நன்மையையே நான் எதிர்பார்க்கின்றேன். ஆயினும், நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், என்னிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்து கொள்ளப்படும் என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற் குப் பிறகு நான் யாரையும் தூய்மையான வர் என்று ஒருபோதும் கூறுவதேயில்லை. இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் நாஃபிஉ பின் யஸீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் இறைத்தூராக இருந்தும், அவரிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பது எனக்குத் தெரியாது” என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، قال اخبرني خارجة بن زيد بن ثابت، ان ام العلاء امراة من الانصار بايعت النبي صلى الله عليه وسلم اخبرته انه اقتسم المهاجرون قرعة فطار لنا عثمان بن مظعون، فانزلناه في ابياتنا، فوجع وجعه الذي توفي فيه، فلما توفي وغسل وكفن في اثوابه، دخل رسول الله صلى الله عليه وسلم فقلت رحمة الله عليك ابا السايب، فشهادتي عليك لقد اكرمك الله. فقال النبي صلى الله عليه وسلم " وما يدريك ان الله قد اكرمه ". فقلت بابي انت يا رسول الله فمن يكرمه الله فقال " اما هو فقد جاءه اليقين، والله اني لارجو له الخير، والله ما ادري وانا رسول الله ما يفعل بي ". قالت فوالله لا ازكي احدا بعده ابدا. حدثنا سعيد بن عفير، حدثنا الليث، مثله. وقال نافع بن يزيد عن عقيل، ما يفعل به وتابعه شعيب وعمرو بن دينار ومعمر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1243
- Book Index
- 6
Grades
- -
