ஹதீஸ்கள்
#1239
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும்படி) கட்டளையிட்டு, ஏழு விஷயங்களைத் தடை செய்தார்கள். ஜனாஸாவைப் பின்தொடரும்படியும், நோயாளியை நலம் விசாரிக்கும் படியும். விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவும்படியும், சலாமுக்குப் பதில் கூறும்படியும், தும்மியவ(ர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ எனக் கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ்- இறைவன் உங்களுக்குக் கருணை புரிவானாக! என) மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், (ஆண்கள்) தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் (கலப்படமில்லாத) பட்டு, அலங்காரப் பட்டு, ‘கஸ்’ எனும் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு ஆகியவற்றை அணிவதிலிருந்தும் எங்களைத் தடை செய்தார்கள்.4 அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، عن الاشعث، قال سمعت معاوية بن سويد بن مقرن، عن البراء رضى الله عنه قال امرنا النبي صلى الله عليه وسلم بسبع، ونهانا عن سبع امرنا باتباع الجنايز، وعيادة المريض، واجابة الداعي، ونصر المظلوم، وابرار القسم، ورد السلام، وتشميت العاطس. ونهانا عن انية الفضة، وخاتم الذهب، والحرير، والديباج، والقسي، والاستبرق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1239
- Book Index
- 3
Grades
- -
