ஹதீஸ்கள்
#1229
ஸஹீஹ் அல்-புகாரீ - Forgetfulness in Prayer
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மாலை நேர இரு தொழுகைகளில் ஒன்றைத் தொழுவித்த நபி (ஸல்) அவர்கள், இரண்டு ரக்அத்களிலேயே சலாம் கொடுத்துவிட்டார்கள். (அநேக மாக அது அஸ்ர் தொழுகை என்றே நினைக்கிறேன் என அறிவிப்பாளர் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.) பின்பு எழுந்து பள்ளி வாசலின் முற்பகுதியிலிருக்கும் மரக் கட்டையை நோக்கிச் சென்று அதன் மேல் தமது கையை ஊன்றிக்கொண்டு நின்றார்கள். அங்கே இருந்தவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) இருவரும் நபி (ஸல்) அவர்களிடத்தில் அது பற்றிப் பேசப் பயந்துகொண்டிருந்தபோது, பள்ளிவாசலில் இருந்து வேகமாக வெளியேறிய மக்கள், தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதோ எனப் பேசிக்கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களால் ‘துல்யதைன்’ என அழைக்கப்படும் ஒருவர், “நீங்கள் மறந்துவிட்டீர்களா? அல்லது தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா?” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் மறக்கவும் இல்லை; (தொழுகை) குறைக்கப்படவும் இல்லை” என்றவுடன், “இல்லை நீங்கள் மறந்துவிட்டீர்கள்” என அவர் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டுப் பிறகு சலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தமது வழக்கமான சஜ்தாவைப் போன்றோ, அல்லது அதைவிட நீண்டதாகவோ சஜ்தா செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி தக்பீர் கூறினார்கள். மீண்டும் தலையை (பூமியில்) வைத்து தக்பீர் கூறினார்கள். தமது வழக்கமான சஜ்தாவைப் போன்றோ, அல்லது அதைவிட நீண்ட தாகவோ சஜ்தா செய்து, பிறகு தமது தலையை உயர்த்தியவாறே தக்பீர் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، حدثنا يزيد بن ابراهيم، عن محمد، عن ابي هريرة رضى الله عنه قال صلى النبي صلى الله عليه وسلم احدى صلاتى العشي قال محمد واكثر ظني العصر ركعتين ثم سلم ثم قام الى خشبة في مقدم المسجد فوضع يده عليها وفيهم ابو بكر وعمر رضى الله عنهما فهابا ان يكلماه وخرج سرعان الناس فقالوا اقصرت الصلاة ورجل يدعوه النبي صلى الله عليه وسلم ذو اليدين فقال انسيت ام قصرت فقال " لم انس ولم تقصر ". قال بلى قد نسيت. فصلى ركعتين ثم سلم ثم كبر فسجد مثل سجوده او اطول، ثم رفع راسه فكبر، ثم وضع راسه فكبر فسجد مثل سجوده او اطول، ثم رفع راسه وكبر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Forgetfulness in Prayer
- Hadith Index
- #1229
- Book Index
- 7
Grades
- -
