ஹதீஸ்கள்
#1228
ஸஹீஹ் அல்-புகாரீ - Forgetfulness in Prayer
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் (நான்கு ரக்அத் தொழுகையில்) இரண்டு ரக்அத்துடன் தொழுகையை முடித்துக் கொண்டபோது துல்யதைன் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது நீங்கள் மறந்துவிட்டீர்களா?” எனக் கேட்டார். “துல்யதைன் கூறுவது உண்மைதானா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்க, மக்களும் ‘ஆம்’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பிந்தைய இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தமது வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீண்டதாகவோ சஜ்தா செய்து, பின் (அதிலிருந்து) எழுந்தார்கள். (அத்தஹிய்யாத் ஓதவில்லை). இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் சலமா பின் அல்கமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் “(மறதிக்குரிய சிரவணக்க மான) ‘சஜ்தா சஹ்வி’ல் ‘அத்தஹிய்யாத்’ உண்டா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பில் அது இல்லை தான்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك بن انس، عن ايوب بن ابي تميمة السختياني، عن محمد بن سيرين، عن ابي هريرة رضى الله عنه . ان رسول الله صلى الله عليه وسلم انصرف من اثنتين فقال له ذو اليدين اقصرت الصلاة ام نسيت يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم " اصدق ذو اليدين ". فقال الناس نعم. فقام رسول الله صلى الله عليه وسلم فصلى اثنتين اخريين ثم سلم ثم كبر فسجد مثل سجوده او اطول ثم رفع
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Forgetfulness in Prayer
- Hadith Index
- #1228
- Book Index
- 5
Grades
- -
