ஹதீஸ்கள்
#1222
ஸஹீஹ் அல்-புகாரீ - Actions while Praying
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு ‘பாங்கு’ (தொழுகை அறிவிப்பு) சொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் காற்று விட்டவனாக ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் முன்னே வருகிறான். இகாமத் சொல்லப்பட்டதும் திரும்பி ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் முன்னே வருகிறான். தொழுதுகொண்டிருக்கும் மனிதரி டம் “நீ இதுவரை நினைத்திராதவற்றை யெல்லாம் நினைத்துப்பார்” என்று கூறுவான். முடிவில் அம்மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதையே அறியாதவராகிவிடுவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “இவ்வாறு உங்களில் ஒருவருக்கு (மறதி) ஏற்பட்டால், அமர்ந்த நிலையில் இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن جعفر، عن الاعرج، قال قال ابو هريرة رضى الله عنه قال رسول الله صلى الله عليه وسلم " اذا اذن بالصلاة ادبر الشيطان له ضراط حتى لا يسمع التاذين، فاذا سكت الموذن اقبل، فاذا ثوب ادبر فاذا سكت اقبل، فلا يزال بالمرء يقول له اذكر ما لم يكن يذكر حتى لا يدري كم صلى ". قال ابو سلمة بن عبد الرحمن اذا فعل احدكم ذلك فليسجد سجدتين وهو قاعد. وسمعه ابو سلمة من ابي هريرة رضى الله عنه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Actions while Praying
- Hadith Index
- #1222
- Book Index
- 26
Grades
- -
