ஹதீஸ்கள்
#1221
ஸஹீஹ் அல்-புகாரீ - Actions while Praying
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுதேன். அவர்கள் ‘சலாம்’ கொடுத்ததும் வேகமாக எழுந்து தம் துணைவியரில் ஒருவரது இல்லத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். தமது விரைவைக் கண்டு மக்கள் வியப்படை வதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “நான் தொழுதுகொண்டிருக்கும்போது எங்களிடம் இருந்த தங்கக்கட்டி ஒன்று என் நினைவுக்கு வந்தது. அது எங்களி டம் ‘ஒரு மாலைப்பொழுதோ’ அல்லது ‘ஓர் இரவுப் பொழுதோ’ இருப்பதைக் கூட நான் விரும்பவில்லை. எனவே, அதைப் பகிர்ந்து வழங்குமாறு கட்டளை யிட்டேன்” என விளக்கினார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن منصور، حدثنا روح، حدثنا عمر هو ابن سعيد قال اخبرني ابن ابي مليكة، عن عقبة بن الحارث رضى الله عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم العصر، فلما سلم قام سريعا دخل على بعض نسايه، ثم خرج وراى ما في وجوه القوم من تعجبهم لسرعته فقال " ذكرت وانا في الصلاة تبرا عندنا، فكرهت ان يمسي او يبيت عندنا فامرت بقسمته
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Actions while Praying
- Hadith Index
- #1221
- Book Index
- 25
Grades
- -
