ஹதீஸ்கள்
#1217
ஸஹீஹ் அல்-புகாரீ - Actions while Praying
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், என்னைத் தமது அலுவல் நிமித்தம் (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பிவந்து நபி (ஸல்) அவர்களுக்கு ‘சலாம்’ கூறினேன். அவர்கள் எனக்கு மறுமொழி கூற வில்லை. அப்போது என் மனத்தில் ஏற்பட்ட (கவலையான)து அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். நான் தாமதமாக வந்ததால் என்மேல் நபி (ஸல்) அவர்கள் கோப மாக இருக்கக்கூடும் என்று மனதிற்குள் கூறிக்கொண்டேன். பிறகு மறுபடியும் சலாம் கூறினேன். அவர்கள் பதில் கூறவில்லை. முன்பை விடக் கடுமையான (வேதனையான)து என் மனத்தில் தோன்றியது. பின்னர் மீண்டும் சலாம் கூறினேன். அப்போது எனக்குப் பதில் சலாம் கூறிவிட்டு, நான் தொழுதுகொண்டிருந்ததால்தான் உமக்குப் பதில் கூறவில்லை என்று கூறினார்கள். (நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது) அவர்கள் கிப்லா அல்லாத திசையை நோக்கி தமது வாகனத்தின் மீதமர்ந்து தொழுது கொண்டிருந்தார்கள்.12 அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، حدثنا كثير بن شنظير، عن عطاء بن ابي رباح، عن جابر بن عبد الله رضى الله عنهما قال بعثني رسول الله صلى الله عليه وسلم في حاجة له فانطلقت، ثم رجعت وقد قضيتها، فاتيت النبي صلى الله عليه وسلم فسلمت عليه، فلم يرد على، فوقع في قلبي ما الله اعلم به فقلت في نفسي لعل رسول الله صلى الله عليه وسلم وجد على اني ابطات عليه، ثم سلمت عليه فلم يرد على، فوقع في قلبي اشد من المرة الاولى، ثم سلمت عليه فرد على فقال " انما منعني ان ارد عليك اني كنت اصلي ". وكان على راحلته متوجها الى غير القبلة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Actions while Praying
- Hadith Index
- #1217
- Book Index
- 21
Grades
- -
