ஹதீஸ்கள்
#1184
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayer at Night (Tahajjud)
மர்ஸத் பின் அப்தில்லாஹ் அல்யஸனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (எகிப்தின் ஆளுநராயிருந்த) உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடம் சென்று, “அபூதமீம் (அப்துல்லாஹ் பின் மாலிக்-ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் தொழுகிறார்களே, உங்களுக்கு இது ஆச்சரியமாக இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நாங்கள் அவ்வாறு செய்துவந்தோம்” என்று விடையளித்தார்கள். “இப்போது ஏன் நீங்கள் செய்வதில்லை?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அலுவல்களே காரணம்’ என்றார்கள்.36 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يزيد، قال حدثنا سعيد بن ابي ايوب، قال حدثني يزيد بن ابي حبيب، قال سمعت مرثد بن عبد الله اليزني، قال اتيت عقبة بن عامر الجهني فقلت الا اعجبك من ابي تميم يركع ركعتين قبل صلاة المغرب. فقال عقبة انا كنا نفعله على عهد رسول الله صلى الله عليه وسلم. قلت فما يمنعك الان قال الشغل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayer at Night (Tahajjud)
- Hadith Index
- #1184
- Book Index
- 61
Grades
- -
