ஹதீஸ்கள்
#1179
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayer at Night (Tahajjud)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: உடல் பருமனாக இருந்த ஓர் அன்சாரித் தோழர் (இத்பான் பின் மாலிக்) நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “என்னால் (பள்ளிவாசலுக்கு வந்து) உங்களுடன் நின்று தொழ முடிவதில்லை” என்று கூறினார். எனவே, அவர் நபியவர்களுக் காக உணவு சமைத்துத் தமது இல்லத்திற்கு வருமாறு அழைத்தார். (அவரது இல்லத்திற்கு நபி (ஸல்) அவர்கள் சென்றபோது) அவர்கள் தொழுவதற்காக அவர் (பாயொன்றை விரித்து, பதப்படுத்துவதற்காக அந்தப்) பாயின் ஓரத்தில் தண்ணீர் தெளித்தார். நபி (ஸல்) அவர்கள் அதன்மீது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அப்துல் ஹமீத் பின் முன்திர் பின் அல்ஜாரூத் (ரஹ்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் ‘ளுஹா’ தொழுகை தொழுவார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “அன்றைய தினம் தவிர வேறு எப்போதும் அவர்கள் தொழ நான் பார்த்ததில்லை” என விடையளித்தார்கள். இதை அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.34 அத்தியாயம் :
حدثنا علي بن الجعد، اخبرنا شعبة، عن انس بن سيرين، قال سمعت انس بن مالك الانصاري، قال قال رجل من الانصار وكان ضخما للنبي صلى الله عليه وسلم اني لا استطيع الصلاة معك. فصنع للنبي صلى الله عليه وسلم طعاما، فدعاه الى بيته، ونضح له طرف حصير بماء فصلى عليه ركعتين. وقال فلان بن فلان بن جارود لانس رضى الله عنه اكان النبي صلى الله عليه وسلم يصلي الضحى فقال ما رايته صلى غير ذلك اليوم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayer at Night (Tahajjud)
- Hadith Index
- #1179
- Book Index
- 57
Grades
- -
