ஹதீஸ்கள்
#1176
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayer at Night (Tahajjud)
அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘ளுஹா’ தொழுத தாக உம்முஹானீ (ரலி) அவர்களைத் தவிர வேறெவரும் எமக்கு அறிவிக்க வில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தமது இல்லத்திற்கு வந்து குளித்துவிட்டு, எட்டு ரக்அத்கள் தொழுததாக உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள். மேலும், “நபி (ஸல்) அவர்கள் அதைவிடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகைகளையும் தொழுததை நான் ஒருபோதும் கண்டதில்லை. ஆயினும், அவர்கள் ருகூஉவையும் சஜ்தாவையும் நிறைவாகச் செய்தார்கள்” என்றும் உம்முஹானீ (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.32 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا عمرو بن مرة، قال سمعت عبد الرحمن بن ابي ليلى، يقول ما حدثنا احد، انه راى النبي صلى الله عليه وسلم يصلي الضحى غير ام هاني فانها قالت ان النبي صلى الله عليه وسلم دخل بيتها يوم فتح مكة فاغتسل وصلى ثماني ركعات فلم ار صلاة قط اخف منها، غير انه يتم الركوع والسجود
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayer at Night (Tahajjud)
- Hadith Index
- #1176
- Book Index
- 54
Grades
- -
