ஹதீஸ்கள்
#1175
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayer at Night (Tahajjud)
முவர்ரிக் பின் முஷம்ரிஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் ‘ளுஹா’ (முற்பகல்) தொழுகை தொழுவது உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். “சரி, உமர் (ரலி) அவர்கள் தொழுவார் களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். “சரி, அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுவார்களா?” என்று கேட்டேன். அதற்கும் ‘இல்லை’ என்றார்கள். “சரி, நபி (ஸல்) அவர்கள் (தொழுவார் களா)?” என்று கேட்டேன். “அவர்கள் தொழுததாக நான் எண்ணவில்லை” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى، عن شعبة، عن توبة، عن مورق، قال قلت لابن عمر رضى الله عنهما اتصلي الضحى قال لا. قلت فعمر. قال لا. قلت فابو بكر. قال لا. قلت فالنبي صلى الله عليه وسلم قال لا اخاله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayer at Night (Tahajjud)
- Hadith Index
- #1175
- Book Index
- 53
Grades
- -
