ஹதீஸ்கள்
#1162
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayer at Night (Tahajjud)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லையேல், (தொழுகைக்கு அழைக்கப்படும்வரை) சாய்ந்து படுத்திருப்பார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “சிலர் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத் (தொழுத பிறகுதான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வார்கள்) என இந்த ஹதீஸில் அறிவிக்கின்றனரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; அப்படித்தான்’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال ابو النضر عن ابي سلمة، عن عايشة رضى الله عنها ان النبي صلى الله عليه وسلم كان يصلي ركعتين فان كنت مستيقظة حدثني والا اضطجع. قلت لسفيان فان بعضهم يرويه ركعتى الفجر. قال سفيان هو ذاك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayer at Night (Tahajjud)
- Hadith Index
- #1162
- Book Index
- 41
Grades
- -
