ஹதீஸ்கள்
#1116
ஸஹீஹ் அல்-புகாரீ - Shortening the Prayers (At-Taqseer)
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மூலவியாதி உடையவனாக இருந்தால் நபி (ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “நின்று தொழுவதே சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுபவருக்கு நின்று தொழுபவரின் நன்மையில் பாதியே உண்டு. படுத்துத் தொழுபவருக்கு, உட்கார்ந்து தொழுபவரின் நன்மையில் பாதியே உண்டு” என்று விடையளித் தார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள ‘நாயிம்’ (தூங்குபவர்) எனும் சொல்லுக்கு ‘படுத்துத் தொழுபவர்’ என்பதே என்னைப் பொறுத்த வரை பொருளாகும்.19 அத்தியாயம் :
حدثنا ابو معمر، قال حدثنا عبد الوارث، قال حدثنا حسين المعلم، عن عبد الله بن بريدة، ان عمران بن حصين وكان رجلا مبسورا وقال ابو معمر مرة عن عمران، قال سالت النبي صلى الله عليه وسلم عن صلاة الرجل وهو قاعد فقال " من صلى قايما فهو افضل، ومن صلى قاعدا فله نصف اجر القايم، ومن صلى نايما فله نصف اجر القاعد ". قال ابو عبد الله نايما عندي مضطجعا ها هنا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Shortening the Prayers (At-Taqseer)
- Hadith Index
- #1116
- Book Index
- 36
Grades
- -
