ஹதீஸ்கள்
#1115
ஸஹீஹ் அல்-புகாரீ - Shortening the Prayers (At-Taqseer)
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மூலவியாதி உடையவனாக இருந்ததால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒருவர் நின்று தொழுவதே சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுபவருக்கு, நின்று தொழுபவரின் நன்மையில் பாதியே உண்டு. படுத்துத் தொழுபவருக்கு உட்கார்ந்து தொழுபவரின் நன்மையில் பாதியே உண்டு” என்று விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسحاق بن منصور، قال اخبرنا روح بن عبادة، اخبرنا حسين، عن عبد الله بن بريدة، عن عمران بن حصين رضى الله عنه انه سال نبي الله صلى الله عليه وسلم. اخبرنا اسحاق قال اخبرنا عبد الصمد قال سمعت ابي قال حدثنا الحسين عن ابن بريدة قال حدثني عمران بن حصين وكان مبسورا قال سالت رسول الله صلى الله عليه وسلم عن صلاة الرجل قاعدا فقال " ان صلى قايما فهو افضل، ومن صلى قاعدا فله نصف اجر القايم، ومن صلى نايما فله نصف اجر القاعد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Shortening the Prayers (At-Taqseer)
- Hadith Index
- #1115
- Book Index
- 35
Grades
- -
