ஹதீஸ்கள்
#1114
ஸஹீஹ் அல்-புகாரீ - Shortening the Prayers (At-Taqseer)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து கீழே விழுந்ததால் அவர்களுக்கு வலப்புற விலாப் பகுதியில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. அப்போது அவர்களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது ஒரு தொழுகை(யின் நேரம்) வந்துவிடவே, அவர்கள் உட்கார்ந்தபடியே தொழு(வித்)தார்கள். அப்போது நாங்களும் (அவர்களுக்குப் பின்னால்) உட்கார்ந்த படியே தொழுதோம். (தொழுது முடித்ததும்) “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட் டுள்ளார். அவர் ‘தக்பீர்’ சொன்னால் நீங்களும் ‘தக்பீர்’ சொல்லுங்கள். அவர் ருகூஉ செய்யும்போது நீங்களும் ருகூஉ செய்யுங்கள். (ருகூஉவிலிருந்து) அவர் நிமிர்ந்தால் நீங்களும் நிமிருங்கள். அவர் ‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ் வோரின் புகழுரையை ஏற்கிறான்)’ என்று கூறும் போது நீங்கள் ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا ابن عيينة، عن الزهري، عن انس رضى الله عنه قال سقط رسول الله صلى الله عليه وسلم من فرس فخدش او فجحش شقه الايمن، فدخلنا عليه نعوده، فحضرت الصلاة فصلى قاعدا فصلينا قعودا وقال " انما جعل الامام ليوتم به، فاذا كبر فكبروا واذا ركع فاركعوا، واذا رفع فارفعوا، واذا قال سمع الله لمن حمده. فقولوا ربنا ولك الحمد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Shortening the Prayers (At-Taqseer)
- Hadith Index
- #1114
- Book Index
- 34
Grades
- -
